நீலகிரி : நீலகிரி மாவட்டம் குந்தா அணையில் உள்ள ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி மின் உற்பத்தி தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளதால் உலக வங்கி ஒதுக்கியுள்ள 18 கோடி ரூபாய் நிதியில் டெண்டர் பணிகளை விரைந்து மேற்கொண்டு அணையில், உள்ள 60 சதவீதம் அளவுக்கு சகதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..

89 அடி உயரம் கொண்ட குந்தா அணையில், தேக்கி வைக்கும், தண்ணீர் மூலம் கெத்தை, பரளி, பில்லுார் உள்ளிட்ட புனல் மின் நிலையங்களில் நாள்தோறும், 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், குந்தா அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த அணை தூர்வாரப்படவில்லை. அணையை முழுமையாக தூர்வாரி நிரந்தர தீர்வு ஏற்படுத்தாததால், மழையின் போது ராட்சத குழாயில் சேறும், சகதியில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி மின் உற்பத்தி தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
தற்போது, அணையில், 60 சதவீதம் அளவுக்கு சகதி நிரம்பியுள்ளது. சிறிய மழையிலேயே அணை முழு கொள்ளளவை எட்டி விடும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குழாய்களில் சேர்ந்துள்ள சகதியை, நீர் மூலம் கரைத்து வெளியேற்றும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது.

இந்த தற்காலிக பராமரிப்பு பணி, தொடர்ந்து ஒரு வாரம் நீடித்தால் மட்டுமே குழாயில் சேர்ந்துள்ள அடைப்பை முழுமையாக அகற்ற முடியும். ஆனால், ஒரே நாளில் சகதி அகற்றும் பணி முடிக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. குந்தா அணை தூர்வாரும் பணிக்காக உலக வங்கி நிதியாக, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், டெண்டர் பணி தாமதமாகி வருவதால் மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், டெண்டர் பணியில் உள்ள சிக்கல்களை கலைந்து, விரைவில், பணிகளை துவக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.