காவல்துறை தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் ; 2000க்கும் மேற்பட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கைது

கோவை : கோவை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ள 100 சதவீத சொத்துவரி உயர்வை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை வழங்கியிருப்பதை கண்டித்தும் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மாநகர காவல் துறையின் தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : கோவை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ள 100 சதவீத சொத்துவரி உயர்வை கண்டித்தும், சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை வழங்கியிருப்பதை கண்டித்தும் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை மாநகர காவல் துறையின் தடையை மீறி கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட 100 சதவீத சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யும் உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காவல்துறையிடம் கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.



இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், சொத்துவரி மற்றும் சூயஸ் விவகாரங்களை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையில் மனு அளிக்கப்பட்டது. நேற்று இரவு காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்தனர்.



இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் காவல்துறை தடையை மீறி இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்,சி.பி.எம், சி.பி.ஐ,காங்கிரஸ், கொ.ம.தே.க உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் 2000க்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தினை திரும்ப பெற வேண்டும்,100 சதவீத சொத்து வரியினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் பேட்டியளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பேசுகையில், சொத்துவரி உயர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். காவல் துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் முறையாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பதாகவும் கார்த்திக் குற்றம்சாட்டினார்.



இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...