கோவை : மேட்டுப்பாளையத்தில் தந்தையை தினந்தோறும் மது அருந்த அழைத்துச் சென்ற தாய் மாமனை தட்டிக் கேட்ட பிரசாந்த் என்ற இளைஞரை கொலை செய்த தாய் மாமன் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் வேளாங்கண்ணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பிரசாந்தின் தந்தை வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் இந்நிலையில், மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த்தின் தாய் மாமானாகிய லாரி ஓட்டுனர் சுரேஷ், பிறசாந்தின் தந்தையை தினந்தோறும் மது குடிக்க அழைத்து சென்றுள்ளார். இதனால் பிரசாந்த் வீட்டில் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.
இதையடுத்து கோபமடைந்த பிரசாந்த், நேற்று இரவு சுரேஷ் வீட்டிற்கு சென்று ஏன் எனது அப்பாவை மது குடிக்க அழைத்து சென்றீர்கள் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். இதில் வாய்த் தகராறு முற்றி சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது சொந்த சகோதரியின் மகன் என்று கூட பார்க்காமல் பிரசாந்தின் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பிரசாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார், கொலையாளி சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தனது சொந்த சகோதரியின் மகன் என்று கூட பார்க்காமல் கொலை செய்த தாய் மாமன் சுரேஷின் வெறிச்செயல் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.