கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் சுவரை உடைத்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் தேயிலை தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் எம்.டியில் இரவு குடியிருப்பு பகுதிக்குள் 3 காட்டு யானைகள் நுழைந்தன. காட்டு யானைகள் மகளிர் குழு நியாய விலை கடையின் சுவற்றை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பால் பவுடர் மற்றும் மளிகை பொருட்களை சாப்பிட்டன.

யானைகள் கடைக்குள் நுழைந்ததை பார்த்த பொதுமக்கள், தோட்ட காவலர்களோடு இணைந்து லாரி மூலம் காட்டு யானைகளை விரட்டினர். இதனால் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு சர்க்கரை தப்பின. இருப்பினும் கடையின் சுவர்கள் முற்றிலும் சேதமடைந்தன.
இதனால் இன்று விநியோகிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நியாய விலை கடையை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் தொழிலாளர்கள் உள்ளனர்.