நீலகிரி : குன்னூர் அருகே அளக்கரை பகுதியில் ஒரு குட்டியுடன் வந்த மூன்று கரடிகளை கண்ட தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அளக்கரை பகுதியில் வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டியுடன் மூன்று கரடிகள் உணவு தேடி தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது. ஒரே நேரத்தில் மூன்று கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் வருவதை கண்டு அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர், இதுகுறித்து உடனடியாக கட்டப்பெட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்குள் இந்த கரடிகள் அருகில் உள்ள சோலைக்குள் புகுந்தது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருக்கும் நிலையில், கரடிகள் மனிதர்களை தாக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் அல்லது கூண்டு வைத்துப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும் என இப்பகுதியில் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.