நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றி உள்ள தேயிலை தோட்டங்களில் உலா வரும் ஆண் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை, கொலக்கம்பை, தூதூ்மட்டம், தும்மனட்டி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் உலாவரும் காட்டு யானைகளால் இப்பகுதி தொழிலாளர்கள் தேயிலைகளைப் பறிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர். இங்கு உலா வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்க பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.