பல்லடம் அருகே ஸ்டேட் பாங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி ; போலீசார் தீவிர விசாரணை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஸ்டேட் பாங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஸ்டேட் பாங்க் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே.கள்ளப்பாளையத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் சனிக்கிழமையன்று பணி முடிந்ததும் அலுவலர்கள் வங்கியைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். ஞாயிறு முதல் ஆயுதபூஜை,விஜயதசமி போன்ற விடுமுறை தினம் என்பதால் இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் பணிக்குத் திரும்பிய அலுவலர்கள் வங்கியை திறந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரம் வேறு இடத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



மேலும், வங்கியின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் வங்கியில் புகுந்தது தெரிய வந்தது. 



மேலும் வங்கியை சுற்றிப் போடப்பட்டுள்ள முள்வேலிகளை துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்ததும் தெரியவந்துள்ளது.



இதுகுறித்து, வங்கி ஊழியர்கள் காமநாயக்கன் பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் நகைகள் ஏதாவது திருடப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...