திருப்பூர் : திருப்பூரில் அதிகாலையில் பாத்திர கடையில் ஏற்பட்ட தீ விபத்தை மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பாத்திர பொருட்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஜீகாராம் என்பவருக்கு சொந்தமான பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் பாத்திர கடையில் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியுள்ளது. இதனையடுத்து, கடைக்குள் படுத்திருந்த ஜீகாராம் மற்றும் ஊழியர் சுவர் ஏறி எட்டி குதித்து வெளியில் தப்பி சென்றனர்.

இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயை அணைத்தனர். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பித்தளை, செம்பு மற்றும் சில்வர் முற்றிலும் எரிந்து சேதமாகியது. சேதமாகிய பொருட்களின் மதிப்பு 25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.