சென்னை : காட்டு யானை சின்னதம்பியை உடுமலைப்பேட்டையில் உள்ள கண்ணாடிப்புத்தூரிலிருந்து பொள்ளாச்சியில் உள்ள வரகாளியாறு யானை முகாமுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்ததற்காக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் கள ஊழியர்களுக்கு தமிழக அரசு விருது அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலில் தலைமை வனவிலங்கு வார்டனுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த விருது, தற்போது சின்னதம்பியை வெற்றிகரமாக இடமாற்றம் செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் வனவிலங்கு வார கொண்டாட்டங்களின் முடிவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, கடந்த பிப்ரவரி மாதம் ஆனைமலை புலி காப்பகம் பகுதியில் உள்ள உலந்தி மலைத்தொடரில் இருந்து உடுமலைப்பேட்டையில் மடத்துகுளம் அருகே உள்ள கண்ணாடிப்புத்தூர் வரை சின்னத்தம்பி நடந்து சென்ற போது, 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானையை பின்தொடர்ந்து சென்றது..
பின்னர், சின்னதம்பி யானை அங்கிருந்து வரகாளியாறு கொண்டு செல்லப்பட்டு, அங்கு யானைகள் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சின்னதம்பி யானை கூண்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அமைதியான முறையில் உலா வருவதாக கூறப்படுகிறது.