கோவை : தொடர் பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கும் நிலையில் வனத்தில் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளில் தேங்கியுள்ள நீரில் வனவிலங்குகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்தாண்டு பரவலாக தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்துள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை முடிவுறும் தருவாயிலும் அவ்வப்போது இரவு நேரங்களில் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்தாண்டுகளில் எப்போதும் இல்லாத அளவிற்கு மேட்டுப்பாளையம் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது.

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக வறண்ட பகுதிகள் முழுவதும் பசுமையாக மாறியுள்ள நிலையில், வன உயிரினங்களுக்கு தேவையான உணவு பற்றாக்குறை இந்தாண்டு ஏற்படாத வகையில் வனத்தினுள்ளே கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அத்துடன் வனப்பகுதிகளில் நடுவே ஏற்படுத்தப்பட்ட வனக்குட்டைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் என அனைத்திலும் பருவமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது ரம்மியம் மிக்க வன சூழல் ஏற்பட்டுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் இடம் பெயரும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தற்போது ஏராளமானவை மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.
மேலும், இந்த வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் போதுமான அளவில் வனத்தினுள்ளேயே கிடைப்பதால் வன விலங்குகள் ஊருக்குள் நுழையும் நிகழ்வு தவிர்க்கப்பட்டு வருகிறது. மேலும், வனப்பகுதியில் தேங்கியுள்ள நீர் நிலைகளில் யானை, மான், காட்டு மாடு போன்ற உயிரினங்கள் உற்சாகமாக தண்ணீர் குடிப்பதுடன் அவை தண்ணீரில் தனது குட்டிகளுடன் குளித்து விளையாடி மகிழ்கின்றன.
தற்போது, தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்துள்ளதுடன் வரும் 20ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையும் துவங்க உள்ளதால் தொடர்ச்சியாக வனங்கள் பசுமையாக இருக்கும். இதனால் வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள்ளும் விளைநிலங்களுக்குள்ளும் வரும் நிகழ்வு முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன் யானை மனித மோதல்கள் தவிர்க்கப்படும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.