திருப்பூர் : திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்வில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐயப்பன் கோவில் நம்பூதிரிகள் தங்கவேல் மூலம் குழந்தைகளின் நாவில் ஒம் ஹரி என்றும், பச்சரிசியில் அ, ஆ, என்று எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்வான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்த வருடமும் விஜயதசமி தினமான இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐயப்பன் கோவில் நம்பூதிரிகள் தங்கவேல் மூலம் குழந்தைகளின் நாவில் ஒம் ஹரி என்றும், பச்சரிசியில் அ, ஆ என்று எழுதும் நிகழ்ச்சியும் நடைபெற்றது,
இந்த அகரம் எழுதும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் எழுது பொருட்கள், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.