திருப்பர் : திருப்பூரில் ஆயுதபூஜை பராமரிப்பு பணியின் போது பால் வேன் ஓட்டுனர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (39). இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், ஜெயலட்சுமி மற்றும் ஜெயமணி என இரு மகள்களும் ஜெகன் என்ற மகனும் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் அவினாசியை அடுத்து வேட்டுவபாளையம் கிராமத்தில் குடியிருந்து கொண்டு அதே பகுதியில் பால் வியாபாரியின் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்துள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(35) என்பவரும் வேட்டுவபாளையத்தில் தனது குடும்பத்துடன் வசித்து கொண்டு அதே பால் வியாபாரியிடம் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். ஆயுதபூஜை நாளான நேற்று சின்னத்தம்பி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் அவரவர் ஓட்டும் வேனை சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டனர். இதில் சின்னத்தம்பி அருகிலிருந்த கட்டையால் மணிகண்டனை தாக்கியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த கத்தியை எடுத்து சின்னதம்பியின் மார்பில் இரண்டுமுறை குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சின்னதம்பியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் எடுத்துக்கொண்டு அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சின்னதம்பி உயிரிழந்தார். இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணிகண்டனை சேயூர் போலீசார் தேடி வருகின்றனர்.