ரத்தம் சொட்ட சொட்ட வேண்டுதல் ; வீஸ்கோ, தீஸ்கோ முழக்கங்களுடன் பக்தர்கள் பரவசம்

கோவை : கோவையில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கத்தி போடும் நிகழ்ச்சியாகும்.

கோவை : கோவையில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கத்தி போடும் நிகழ்ச்சியாகும். 



விஜயதசமி தினத்தில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மனை வழிபடும் வகையிலும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தும் வகையில் தங்களது இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியபடி இரு கரங்களிலும் கத்தியால் வெட்டியபடி வழிபாடு நடத்துவது வழக்கம்.



அதன் ஒரு பகுதியாக இன்று காலை கோவை சாய்பாபா காலனி, நெசவாளர் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் வீஸ்கோ, தீஸ்கோ என்ற பக்தி முழக்கத்துடன் ஒரு கைகளிலும் கத்தி போட்டபடி கோவை சுக்கரவார்பேட்டை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் கோவிலுக்கு சென்றனர். இதனை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.



இவ்வாறு கத்தி போடுபவர்கள் விரதம் இருந்து இதனை செய்வதாகவும், இதனை செய்வதின் மூலம் தங்கள் வழிபாடுகள் நிறைவேறுவதாக மனநிறைவுடன் தெரிவித்தனர். கத்தி போடுவதால் ஏற்படும் காயங்களுக்கு அம்மனுக்குச் சாத்தப்பட்ட மஞ்சள் மற்றும் குங்குமம் மருத்துவ பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, பாரதி பார்க் சாலை, சுக்கரவார்பேட்டை, காந்தி பார்க் சாலை உள்ளிட்டவற்றில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடியதை அடுத்து ஏராளமான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...