நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை மலைப்பாதையில் பிரேக் பிடிக்காமல் டெம்போ வேன் கவிழ்ந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக 22 கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளதாலும் மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் மலைப்பாதைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிவகாசியிலிருந்து 22 கல்லூரி மாணவர்கள் உதகைக்கு சுற்றுலா வந்து சுற்றிப்பாா்த்து விட்டு மீண்டும் சிவகாசிக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, உதகை, குன்னூர் மலைப்பாதையில் உள்ள காணிக்கராஜ்நகா் அருகே வரும் போது டெம்போவேனில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் உயிா்தப்பினா்.

இதனையடுத்து, பின்னே வந்த வாகன ஒட்டிகள் வேனில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டனர். இதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக குன்னூர் உதகை மலைப்பாதையில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த விபத்து குறித்து அருவங்காடு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்