தென்திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் புரட்டாசி பிரமோற்சவ தேர் திருவிழா

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தென்திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் புரட்டாசி பிரமோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தென்திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் புரட்டாசி பிரமோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் புரட்டாசி பிரமோற்சவம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து தினசரி வெங்கடேஸ்வர பெருமாள் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.



இந்த நிலையில், பிரமோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வைபவம் இன்று நடைபெற்றது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வரும் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் மலையப்ப சுவாமி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார்.

இதையடுத்து மேள தாளம் முழங்க வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க திருத்தேரினை கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, கோவிலைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...