உதகையின் முக்கிய சாலையில் 20க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உலா; பொது மக்கள் அச்சம்

சாலையின் ஓரம் உள்ள புற்களை மேய்ந்த படி சென்ற அந்த காட்டெருமை கூட்டம் பின்பு அருகில் இருந்த அடர்ந்த சோலைக்குள் சென்றது.

நீலகிரி: உதகை காந்தி பேட்டை சாலையில் இன்று காலை திடீரென 20க்கும் மேற்பட்ட குட்டிகளுடன்  காட்டெருமை கூட்டம் சாலையின் குறுக்கே  அங்கும் இங்கும் ஓடியதால் பொது மக்கள்
பீதி அடைந்தனர்.



உதகை காந்தி பேட்டை சாலையை சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து  இன்று காலை 20க்கும் மேற்பட்ட குட்டியுடன் கூடிய காட்டெருமைகள்  திடீரென சாலையில் உலா வந்தன.



அந்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பீதியில் உறைந்தனர்.

குட்டிகளுடன் அந்த காட்டெருமைகள் இருந்ததால் அங்கும் இங்கும் ஆக்ராேஷத்துடன் சாலையில் சுற்றித் திரிந்தன. சுமார் ஒரு மணி நேரம் வாகன ஓட்டிகள் யாரும் அந்த சாலையின் இரு புறமும் செல்ல முடியாமல் தவித்தனர்.



சாலையின் ஓரம் உள்ள புற்களை மேய்ந்த படி சென்ற அந்த காட்டெருமை கூட்டம் பின்பு  அருகில்  இருந்த அடர்ந்த சோலைக்குள் சென்றது.

இப்படி காட்டெருமைகள்  அவ்வப்போது சாலைக்கு வந்து செல்வதால் விபத்துக்கள் நேரிடும் சூழல் இருப்பதால், வனத்துறையினர் இவற்றை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள்  நிரந்தரமாகத் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...