கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 379 தேர்த்திருவிழா இன்று, நடைபெறுகிறது.

கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தேர்த்திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு திருப்பலிகள், ஆராதனைகள் நடைபெற்றது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுப்பிரார்த்தனை ஞாயிறு காலை 8 மணிக்கு துவங்கியது. சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியை ஏற்றிவைத்து அந்த ஆலயத்தை பசிலிக்காவாக (புனித தலம்) அறிவித்த அவர் ரோமில் இருந்து அளிக்கப்பட்ட கடிதத்தை பொதுமக்கள் முன்னிலையில் படித்து காட்டினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இன்று இரவு புனித அன்னை ஜெபமாலை திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சிகளுடன் முடிவடைகிறது.
இதுகுறித்து கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறுகையில், "மிகவும் பழமைவாய்ந்த இந்த திருத்தலத்தை பசிலிக்காவாக அறிவிக்க கோரி ரோமில் உள்ள தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்ததன் பெயரில் தற்போது புனித தலமாக (பசிலிக்கா) இந்த ஆலயம் அறிவிக்கப்பட்டது."
இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இந்த ஆலயத்தில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர் திருவிழாவை ஒட்டி தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேர் திருவிழாவையொட்டி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.