அரசை தேடி மக்கள்‌ என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது - அமைச்சர் எஸ்‌.பி.வேலுமணி

கோவை : கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ எதிர்காலத்தேவையை பூர்த்தி செய்யும்‌ வகையிலான வளர்ச்சித் திட்டப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி அவர்கள்‌ தகவல்‌.

கோவை : கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ எதிர்காலத்தேவையை பூர்த்தி செய்யும்‌ வகையிலான வளர்ச்சித் திட்டப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி அவர்கள்‌ தகவல்‌.

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, சூலூர் அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ சிறப்பு குறைதர்க்கும்‌ முகாம் நடைபெற்றது. 



நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ சுமார்‌ 745க்கும்‌ மேற்பட்ட பொதுமக்களிடம்‌ இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 551 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில்‌ அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌. 




இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்‌.பி. வேலுமணி பேசியதாவது: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌, தமிழக மக்களின்‌ நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள்‌ அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால்‌ சிறப்பான முறையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள்‌ என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக அரசின்‌ நலத்திட்டங்களை பொதுமக்கள்‌ மென்மேலும்‌ தெரிந்து கொள்ளும்‌ வகையில்‌ அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு கிராமங்கள்‌ தோறும்‌ மக்கள்‌ தொடர்பு முகாம்‌ மாதம்‌ ஒருமுறை மாவட்டத்தில்‌ உள்ள கிராமப்புறங்களில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌, அனைத்துதுறை உயர்‌ அலுவலர்களைக்‌ கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மக்களின்‌ குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அம்மாவின்‌ அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஓவ்வொரு திங்கட்கிழமையும்‌ மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, நடத்தப்படுகிறது. விவசாயிகள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும்‌ நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி, குறைதீர்ப்பு நிகழ்வுகளில்‌ பட்டா மாற்றம்‌, சமூக பாதுகாப்பு திட்டம்‌ மற்றும்‌ முதலமைச்சரின்‌ உழவர்‌ பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ முதியோர்‌ ஓய்வூதியம்‌, ஆதரவற்ற விதவைகள்‌ ஓய்வூதியம்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ ஓய்வூதியம்‌, இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச்‌ சான்றிதழ்‌, வருமானச்‌ சான்றிதழ்‌, வாரிசு சான்றிதழ்‌ போன்ற சான்றிதழ்கள்‌ உடனுக்குடன்‌ வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த சிறப்புத்‌ திட்டத்தை செம்மையாக நடைமுறைபடுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு 25 ஆயிரம்‌ ரூபாய்‌ வீதம்‌ 76 லட்சத்து 25 ஆயிரம்‌ ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌, அனைத்து நகர்புற வார்டுகளிலும்‌, கிராமங்களிலும்‌ உரிய விளம்பரத்திற்கு பின்னர்‌, மாவட்ட ஆட்சித்தலைவரின்‌

உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில்‌ வருவாய்த்‌ துறை, ஊரக வளர்ச்சித்‌ துறை 7 நகர்புற வளர்ச்சித்‌ துறை மற்றும்‌ பிற துறைகளைச்‌ சார்ந்த ஒரு அலுவலர்‌ குழுவின்‌ மூலம்‌ மனுக்கள்‌ பெறப்படும்‌.

இம்மனுக்கள்‌ அனைத்தும்‌ கணினியில்‌ பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள்‌ அனுப்பப்படும்‌. அம்மனுக்கள்‌ மீது ஒரு மாத காலத்திற்குள்‌ தீர்வு காணப்படும்‌.

அதனடிப்படையில்‌ இன்று சூலூர்‌ அரசு ஆண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ சிறப்பு குறைதீர்க்கும் திட்டம்‌ நடைபெறுகிறது. இங்கு பெறப்படும்‌ மனுக்கள்‌ அனைத்தும்‌ சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள்‌ அனுப்பட்டு, அம்மனுக்கள்‌ மீது ஒரு மாத காலத்திற்குள்‌ தீர்வு காணப்படும்‌. 

பல்வேறு நலத்‌ திட்டப்‌ பயன்களை இவ்விழாவில்‌ வழங்குவதோடு மக்களின்‌ அடிப்படைத்‌ தேவைகளான சாலைகள்‌, தெரு விளக்குகள்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ போன்ற அடிப்படை தேவைகளுக்கும்‌ தீர்வு காணப்படும்‌. மேலும்‌, இத்திட்டம்‌ மக்களின்‌ குறைகளுக்கு தீர்வு காணும்‌ மாநில அரசின்‌ முக்கியமான சிறப்புத்‌ திட்டமாக திகழும்‌.

இன்ற, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்துறை சார்பில்‌, சக்கர நாற்காலி, காதொலிக்கருவி என 12 பயணாளிகளுக்கு ரூ.58380 மதிப்பிலும்‌, மகளிர்‌ திட்டத்தின்‌ சார்பில்‌, அம்மா இருசக்கர வாகனம்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 50 பயணாளிகளுக்கு ரூ.12,50,000 மதிப்பிலும்‌, 18 மகளிர்‌ சுய உதவிக்குழுக்ளுக்கு ரூ.86,00,000 மதிப்பிலும்‌, வருவாய்துறையின்‌ மூலம்‌ 138 பயனாளிகளுக்கு ரூ.63,57.590 மதிப்பில்‌ விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களும்‌, கோவை மாவட்ட சூலூர் வட்டம்‌ சமூக பாதுகாப்பு திட்டப்பிரிவில்‌ மாதாந்திர உதவித்‌ தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 40) பயணாளிகளுக்கு ரூ.480000 மதிப்பிலும்‌, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌, இலவச சலவைப்‌ பெட்டி, இலவச தையல்‌ இயந்திரம்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 5 பயணாளிகளுக்கு ரூ.23625 மதிப்பிலும்‌, 6 வேளாண்மைத்துறை சார்பில்‌ தெளிப்பு நாபாசனக் கருவி பணி ஆணை, அங்கக வேளாண்மை கிட்‌ வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 6 பயணாளிகளுக்கு ரூ.47823 மதிப்பிலும்‌, தோட்டக்கலைத்துறை சார்பில்‌, தேசிய தோட்டக்கலை வரிவாக்க இயக்க திட்டத்தின்‌ கீழ்‌ 5 பயணாளிகளுக்கு ரூ.616000 மதிப்பிலும்‌, மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ சார்பில்‌ மான்யத்துன' சுயதொழில்‌ கடனுதவி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 4 பயனாளிகளுக்கு ரூ.10485000 மதிப்பில்‌ கடனுதவிகளும்‌, தாட்கோ துறையின்‌ சார்பில்‌, தொழில்‌ துவங்க கடனுதவியாக 4 பயணாளிகளுக்கு ரூ.1971927 மதிப்பிலும்‌, மாவட்ட வழங்கல்‌ துறையின்‌ சார்பில்‌ குடும்ப அட்டை 48 பயணாளிகளுக்கும்‌, ஊரக வளர்ச்சி முகமையின்‌ சார்பில்‌ நிலத்தில்‌ மண்‌ வரப்பு அமைத்தல்‌, தோட்டத்தில்‌ மண்‌ ஏரி அமைப்பதற்கு, கழிவுகுழி பணி அமைக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 206 பயணாளிகளுக்கு ரூ.9931000 மதிப்பிலும்‌, பள்ளி கல்வி துறையின்‌ சார்பில்‌ ஆசிரியா்களுக்கான மடிக்கணினி வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 15 ஆசிரியர்களுக்கு ரூ.184095 மதிப்பிலும்‌ என மொத்தம்‌ 551 பயணாளிகளுக்கு ரூ.4,00,05,440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்‌ வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்:

கோவை மாவட்ட மக்களின்‌ நீண்ட கால கனவான மெட்ரோ ரயில்‌ திட்டம்‌. (சென்னை மெட்ரோ இரயில்‌ கார்ப்ரேசன்‌ மூலம்‌ கள ஆய்வு நடைபெற்று வருகிறது) ரூ.1500 கோடியில்‌ உலகத்தரத்திற்கு இணையாக கோவை மாநகரில்‌ ஸ்மார்ட்சிட்டி திட்டம்‌, ரூ.1550 கோடியில்‌ கோவை மாநகராட்சியுடன்‌ இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில்‌ 1745 கி.மீ. நீளம்‌ மழைநர்‌ வடிகால்‌ வசதி. ரூ.1652 கோடியில்‌ அத்திக்கடவு அவினாசித்‌ திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகின்றது.

அவினாசி சாலையில்‌ உள்ள உப்பிலிபாளையம்‌ முதல்‌ சின்னியம்பாளையம்‌ (விமான நிலையம்‌) வரை ரூ.1000 கோடி மதிப்பில்‌ பாலம்‌ அமைக்க ரூ.3.4|0கோடி மதிப்பில்‌ முழுமையான திட்ட அறிக்கை தயார்‌ செய்யபட்டு, பணிகள்‌ விரைவில்‌ துவங்கப்படவுள்ளது.

மேலும், 627.89 ஏக்கரில்‌ கோவை விமான நிலைய விரிவாக்கம்‌ - தற்போது நில எடுப்பிற்கான இழப்பீட்டுத்‌ தொகை நில உடமைதாராகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன்‌, தொடர்ச்சியாக இழப்பீட்டுத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்மூலம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ பயணிகள்‌ விமான சேவை மட்டுமல்லாது, சரக்கு விமான சேவையும்‌ வழங்க இயலும்‌. 

இதனால்‌ திருப்பூர்‌ மற்றும்‌ கோவையில்‌ உற்பத்தியாகும்‌ பனியன்‌ மற்றும்‌ மோட்டார் உதிரிப்பாகங்கள்‌ ஏற்றுமதி செய்வதற்கு கொச்சின்‌ செல்லவேண்டிய நிலை மாறும்‌. புதிய நிறுவனங்கள்‌ தொழில்‌ தொடங்கப்படுவதுடன்‌ இளைஞா்களுக்கான தொழில்‌ வாய்ப்புகளும்‌ ஏற்படுத்தப்படும்‌.

ரூ.192 கோடி மதிப்பீட்டில்‌ காந்திபுரம்‌ முதலடுக்கு உயர்மட்ட மேம்பாலம்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதுடன்‌, ரூ.194 கோடி மதிப்பில்‌ இரண்டாம்‌ கட்ட மேம்பாலப்பணிகளும்‌ முடியும்‌ தருவாயில்‌ உள்ளது. 

ரூ.215 கோடியில்‌ ஆத்துப்பாலம்‌ - உக்கடம்‌ வரை மேம்பாலம்‌ பணிகள்‌ வேகமாக நடைபெற்று வருகிறது. அதுபோலவே, கவுண்டம்பாளையத்தில்‌ ரூ.66 கோடி மதிப்பீட்டில்‌ உயர்மட்டப்பாலம்‌ கட்டப்பட்டு வருகின்றது.

இராமநாதபுரம்‌ பகுதியில்‌ சுமார்‌ 3.6கி.மீ நீளத்தில்‌ ரூ.253 கோடி மதிப்பிட்டில்‌ உயர்மட்ட மேம்பாலம்‌ அமைக்கும்‌ பணி விரைந்து நடைபெற்று வருகின்றது. 

பொள்ளாச்சி முதல்‌ ஈச்சனாரி வரை ரூ.414.90 கோடி மதிப்பில்‌ சாலை அமைக்கும்‌ பணி முடியும்‌ தருவாயில்‌ உள்ளது. மேலும்‌, கிராமப்புற மாணவ மாணவியர்கள்‌ அவர்கள்‌ சார்ந்த பகுதியிலேயே, தங்களின்‌ உயர்கல்வி கற்க ஏதுவாக தொண்டாமுத்தூர்‌, மேட்டுப்பாளையம்‌, பொள்ளாச்சி மற்றும்‌ பல்லடம்‌ ஆகிய பகுதிகளில்‌ புதிய அரசுக்‌ கலைக்கல்லூரிகள்‌ தொடங்கப்பட்டுள்ளது. 

இதன்‌ மூலம்‌ கிராமப்புற மாணவ மாணவியர்களின்‌ உயர்கல்வி இடைநிற்றல்‌ தவீிர்க்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களின்‌ வசதிக்காக எளிதில்‌ வட்ட அளவிலான அலுவலர்களை அணுக வழி செய்யும்‌ வகையில்‌, மதுக்கரை, பேரூர்‌, ஆனைமலை, ஆகிய வட்டங்களும்‌, கோயம்புத்தூர்‌ வடக்கு வருவாய்‌ கோட்டமும்‌ தோற்றுவிக்கப்பட்டுள்ளது. குறிச்சி, குனியமுத்தூர்‌, வடசித்தூர்‌, இடிகரை, செம்மேடு,

ஆகிய புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டும்‌, கரடிமடை, தாளியூர்‌, கல்வீரம்பாளையம்‌, நல்லட்டிபாளையம்‌ ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தரங்களும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல எண்ணற்ற திட்டங்கள்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு பெருமுயற்சியுடன்‌ செயல்படுத்தப்படுகின்றன என நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வூலுமணி அவர்கள்‌ தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...