திருப்பூர் : ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பூஜைக்குத் தேவையான பொருட்களான பொரிகடலை, வாழை மரம், பூக்கள், பழங்கள், மாவிலைகள், கரும்புகள், சந்தனம், குங்குமம், கலர் கோலப்பொடிகள் விற்பனை களைகட்டியுள்ளது.
திருப்பூர் : ஆயுத பூஜையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பூஜைக்குத் தேவையான பொருட்களான பொரிகடலை, வாழை மரம், பூக்கள், பழங்கள், மாவிலைகள், கரும்புகள், சந்தனம், குங்குமம், கலர் கோலப்பொடிகள் விற்பனை களைகட்டியுள்ளது.

கடந்தாண்டு விற்பனை போலவே இந்த ஆண்டும் வாழைமரம் ஜோடி 30 ரூபாயும், மாவிலை தோரணங்கள் 10 ரூபாய்க்கும், கரும்புகள் ஜோடி 100 ரூபாய் முதல் விற்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் விற்கப்படுகின்ற பழங்களின் விலை கடந்த ஆண்டைப் போலவே விழா நாட்களுக்காக 50 ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.

நேற்று முன்தினம் கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது 180 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆரஞ்ச் தற்போது 120 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாதுளை தற்போது 140 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், பூக்களின் வரத்து பெருமளவு குறைந்து உள்ளதால் நேற்று முன்தினம் கிலோ 600 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த முல்லைப்பூ தற்போது 500 ரூபாய்க்கும், 240 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஜாதி மல்லி பூ தற்பொழுது 480 ரூபாய்க்கும், கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த செவ்வந்திப்பூ தற்போது 320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பழங்கள் மற்றும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையிலும் பொதுமக்கள், மில் உரிமையாளர்கள் மற்றும் பிற தொழில் செய்பவர்கள் பெரும் அளவில் பூஜை பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.