கோத்தகிரி அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரிலிருந்து வந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார்..? போலீசார் தீவிர விசாரணை

நீலகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை கிராம பகுதியில் இன்று காலை வெடிச்சத்தம் கேட்டுள்ளது. வெடிச்சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த இடுக்கொரை ஹட்டியை சேர்ந்த கிராம மக்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது நம்பர் பிளேட் இல்லாத கார் ஓன்று அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு செல்வதை பார்த்துள்ளனர். 

உடனடியாக அவர்கள் அந்த சமயத்தில் பணிக்கு சென்று விட்டு தங்களது கிராமத்திற்கு அரசு பஸ்ஸில் திரும்பி வரும் தங்களது ஊர்மக்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு காரில் வருகின்றனர் என எச்சரித்தனர். மேலும், அவர்களது காரை வழிமறித்து, அதில் பயணம் செய்யும் நபர்களை விசாரிக்குமாறு தகவல் அளித்துள்ளனர். 

அதைத்தொடர்ந்து, இடுக்கொரை கிராமத்திலிருந்த குறுகிய சாலையில் அரசு பஸ்சை காருக்கு எதிரே குருக்கே பாேட்டு செல்ல முடியாத வகையில் டிரைவர் பஸ்சை நிறுத்தி உள்ளார். போலீசாருக்கு தகவல் அளித்ததை தெரிந்து கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். 



சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்கள் வந்த காரை சோதனையிட்டு பார்த்தபோது காரில் 2 வீச்சரிவாள் , 3 நாட்டு வெடிகுண்டுகள், மண்ணெண்ணெய் , டார்ச் லைட் உள்ளிட்டவை காருக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கோத்தகிரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததுடன், காரின் உரிமையாளர் யார்?, காரில் வந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என வலைவீசி தேடி வந்தனர்.



இந்நிலையில் காேத்தகிரி பகுதியில் பதுங்கியிருந்த மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மருது பாண்டி (25), இடுக்காெரையைச் சேர்ந்த முருகன் (25), பக்காசுரன் மலைப் பகுதியைச் சேர்ந்த, மகேந்திரன் (26) ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...