எல்ஜி யின் ‘எதுவரை உங்களது முடிவுக்கோடு' சவால் ; கோவை மாரத்தான் போட்டியில் 1668 பேர் பங்கேற்கின்றனர்

கோவை : உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், சமீபத்தில், ‘எதுவரை உங்களது முடிவுக்கோடு (#Whatsyourfinishline) என்ற சவாலை, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்துக்காகவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துவக்கியது. ஒவ்வொரு எல்ஜி பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் என சுயமாக ஆரோக்கியமாக வாழ விரும்புவோரும் பங்கேற்று இலக்கை அடைந்தனர்.

கோவை : உலகின் முன்னணி ஏர் கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ், சமீபத்தில், ‘எதுவரை உங்களது முடிவுக்கோடு (#Whatsyourfinishline) என்ற சவாலை, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்துக்காகவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் துவக்கியது. ஒவ்வொரு எல்ஜி பணியாளர்கள், விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் என சுயமாக ஆரோக்கியமாக வாழ விரும்புவோரும் பங்கேற்று இலக்கை அடைந்தனர்.



இந்த சவால் ELGi உடன் தொடர்புடைய அனைவரையும் தங்கள் சொந்த உடற்பயிற்சி இலக்குகளை நிர்ணயிக்கவும், ஒன்றாக வந்து அவற்றை அடையவும் தூண்டியது. 40 நாட்களில், ELGi #Whatsyourfinishline சவாலை அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரெட், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள 2000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.



எல்ஜி பணியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இணைந்து, 25,000 மைல்களை கடந்தனர். ஓட்டம், நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங், யோகா, ஜாகிங் மற்றும் மலையேற்றம் போன்ற பயிற்சிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர்

இதுகுறித்து எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குளோபல் பிராண்ட் தலைவர் அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், ‘‘எல்ஜியின் எது உங்கள் முடிவுக்கோடு போட்டி, எல்ஜி நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் அனைவரது ஆதரவுடன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த சவால், பணியாளர்கள், வினியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சமுதாயத்தையும் ஒருங்கிணைத்தது. ஒவ்வொருவரையும் ஒரு பொது நலனுக்காக ஒன்றாக மாற்றியது. எல்ஜியின் மதிப்புமிக்க சக்தியை, இந்த ஒற்றுமையின் மூலம் உணரச் செய்தது. இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இதில் சுயமுயற்சி எடுத்து பங்கேற்ற அனைவருக்கும் நன்றி,’’ என்றார்.

 



எல்ஜி எக்யூப்மென்ட் நிறுவனத்தின் மக்கள், அமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவு இயக்குனர் ஆர். ஜெயகாந்தன் பேசுகையில், எது உங்களது முடிவுக்கோடு என்ற சவால், உலகம் முழுவதும் உள்ள எங்களது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, வெற்றிகரமாக இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.

ஒரு பொதுநோக்கிற்காக, பொதுவான இலக்கிற்கு அனைவரும் இணைந்து பந்தயத்தில் போட்டியிட்டுள்ளனர். இலக்கை அடைந்து பரிசுகளை வென்றுள்ளனர். இதில், பணியாளர்களின் பங்கேற்பு மிக முக்கியமானது. ஒவ்வொரு பணியாளர்களும், ஒருவித பயனுக்கு இருப்பர், அவர்கள் அனைவரும் இணைந்து அணி வகுக்க வேண்டியது கட்டாயம்,’’ என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...