கோவை : கோவை மாநகரில் காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்கூத்து நடைபெற்றது.

காவல்துறையில் பணியாற்றி, பணியின் போது இறந்த காவலர்களின் வீரத்தினை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீர வணக்கம் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 1985ம் ஆண்டு கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் ராஜரத்தினம், 2011ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை பிடிக்கச் சென்ற போது அந்த லாரியால் உயிரிழந்த காவலர் சந்திரசேகரன், கோவையில் 1997ம் ஆண்டு தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த மூவரால் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதல்நிலை காவலர் செல்வராஜ் ஆகிய 3 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்தும் நடத்தப்பட்டது. பறை இசை நடனம் என நடைபெற்ற இந்த நிகழ்வானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சுங்கம் வீதி, சுந்தராபுரம், உக்கடம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.