ஊட்டி இரண்டாவது சீசனை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் துவக்கம்

நீலகிரி : ஊட்டி இரண்டாவது சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-உதகை இடையே நீட்டிக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி : ஊட்டி இரண்டாவது சீசனை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-உதகை இடையே நீட்டிக்கப்பட்ட சிறப்பு மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு அடர்ந்த காடுகளின் நடுவே பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணித்து, ஆர்ப்பரிக்கும் அருவிகள், வானுயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் என கொட்டி கிடக்கும் நீலமலையின் இயற்கை அழகினை ரசிக்க இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டினரும் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் உள்ள இந்த மலை ரயில் போக்குவரத்தானது நான்கு பெட்டிகள் மட்டுமே கொண்டதாக இருப்பதால் இதில் 150 பயணிகளுக்கு மேல் செல்ல முடியாது. தினசரி ஒரு ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து பல மாதங்கள் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர். எனவே இந்த மலை ரயில் போக்குவரத்தில் காலதாமதமின்றி அனைவரும் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் இயங்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மலை ரயில் இயக்கப்பட்டது. அதன் காலக்கெடு கடந்தவாரம் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்தது.



இதனையடுத்து, தினசரி இயக்கப்படும் மலை ரயில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சென்ற பின், இந்த மலை ரயில் காலை 9.10க்கு புறப்பட்டு உதகை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. வாரத்தின் இரண்டு விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு இந்த மலை ரயில் சிறப்புக் கட்டணத்தில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. காலை 9.10க்கும் புறப்பட்ட மலை ரயில் 150 பயணிகளுடன் உதகை சென்றது. இன்று துவங்கியுள்ள இந்த மலை ரயில் சேவை, உதகை இரண்டாவது சீசனுக்காக டிசம்பர் மாதம் 29ம் தேதி வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...