கோவை : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை எனப்படும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வெங்கடேசபெருமாளை சேவித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஜடையம்பாளையத்தில் உள்ள தென்திருமலை என அழைக்கப்படும் ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஆலயத்தில் நடைபெறும் வழக்கப்படி, அனைத்து விழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும். அதன் ஒரு பகுதியாக வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று மலையப்பசுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளும் வைபவம் இன்று நடைபெற்றது.

காலையில் சிறப்பு யாகவேள்வில் நடத்தப்பட்டு ஸ்ரீவல்லிபத்தூர் ஆண்டாள் ஆலயத்தில் இருந்து ஆண்டாள் மலர்மாலை கொண்டுவரப்பட்டு மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் கருடசேவை வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலையப்பசாமி கருட வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதனையடுத்து வேதவிற்பனர்கள் மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் மலையப்பசாமி திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். அப்போது, பெண்கள் கற்கண்டு, பழங்கள் தட்டில் வைத்து மலையப்பசாமியை கோவிந்தா கோவிந்தா கோசங்களை எழுப்பி மலையப்பசாமியை வணங்கினர். வசந்த மண்டபத்தில் இருந்து துவங்கிய இந்த கருடசேவையானது நான்குமாட வீதிகளின் வழியே மீண்டும் வசந்த மண்டபம் வந்து நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோராட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.