கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை; கணக்கில் வராத 1.2 லட்சம் பறிமுதல்

கோவை : துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை : கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்துவரும் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்த, லஞ்சம் ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் குறிப்பாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனைகள் மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக ஆர்டிஓ அலுவலகங்களை குறி வைத்தே சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கடந்த ஆண்டு கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 718 கைப்பற்றப்பட்டது.

அதேபோல, நேற்று இரவு கோவையில் நடைபெற்ற திடீர் சோதனையில் ரூ. 1,04,718 பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அதேபோல அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் 20 பேர், போக்குவரத்து வாகன ஆய்வாளர், அலுவலக ஊழியர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.  

அப்போது அங்கு இருந்த ஓர் இடைத்தரகரின் இருசக்கர வாகனத்தில் இருந்த  ரூ.25 ஆயிரம் தொகை குறித்து போலீசார் கேள்வி எழுப்பிய போது அவர் மயங்கினார்.

இதைத்தொடர்ந்து இடைத்தரகர்கள், வாகன ஆய்வாளர்கள் மற்றும் அங்கு இருந்த சம்பந்தமில்லாத ஆர்.சி.புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

இச்சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூ.1.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் கழிவறை வரை பதுக்கி வைக்கப்பட லஞ்ச பணம் : 

கடந்தாண்டு மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென நுழைந்தபோது, அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தன்னிடம் இருந்த பணத்தை அலுவலகத்தில் இருந்த கோப்புகளுக்கு இடையில் மறைத்து வைத்தனர். 

சில ஊழியர்கள் லஞ்சப்பணத்தை கழிவறையில் வீசினார்கள். பலர் பணத்தை ஆங்காங்கே வீசினார்கள். இதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைத்து வைக்கபட்ட பணத்தை கைப்பற்றினர். 

மேலும், நேற்று நடந்த சோதனையில் போதும் அங்கு வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்து நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களின் கீழ் மற்றும் கழிவறை பகுதிகள் என சில ஆயிரம் மதிப்புள்ள தாள்கள் கிடைத்துள்ளன. 

2018 ல்-லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனைகள் :

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் பணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சென்ற ஆண்டு தமிழகம் முழுதும் தொடர் சோதனைகள் நடத்தினர். 

தூத்துக்குடி :  கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

ஒசூர் : சிப்காட் பகுதியில் உள்ள ஆர்.டி.ஒ.சோதனை சாவடியில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராமல் இருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 20 ரூபாய் பணம் சிக்கியது.

கடலூர் : கேப்பர் மலையில் செயல்பட்டுவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் : வட்டாரப் போக்குவரத்து  அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 647 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 718 கைப்பற்றப்பட்டது.

இப்படி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக நடந்த சோதனையில் ரூபாய் 45 லட்சத்திற்கு அதிகமாக கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...