காலியாகிறது ஜீவா நகர் ஆக்கிரமிப்புகளை காலி செய்து கொள்ள ஒருவாரம் கெடு

கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் காலி செய்து கொள்வதாக உறுதியளித்தை தொடர்ந்து மேலும் ஒரு வார கால அவகாசத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கோவை : கோவை ஜீவா நகர் பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் காலி செய்து கொள்வதாக உறுதியளித்தை தொடர்ந்து மேலும் ஒரு வார கால அவகாசத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.

கே.கே. நகர் பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அடிப்படையில் கோவை மேட்டுப்பாளையம் சாலை ஜீவா நகரில் இருந்த 247 வீடுகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 150க்கும் மேற்பட்ட குடிசைவாசிகள் சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.

இதனிடையே வீடுகளை காலி செய்ய மறுத்து போராட்டங்களில் சிலர் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் காலி செய்ய அக்டோபர் 1 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்ததோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்று வீடுகளை காலி செய்து கொண்டிருந்த ஜெயராம் மற்றும்

விஷ்ணு ஆகிய இரண்டு இளைஞர்கள் அருகாமையில் சென்ற மின்சார கம்பியில் இரும்பு கம்பு உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

இதனிடையே வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தங்களுக்கு சரவணம்பட்டி பகுதியிலுள்ள காப்பி கடை பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்குமாறும் ஜீவா நகர் பகுதிவாசிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற மாநகராட்சி ஆணையாளர் ஷிரவண் குமார் ஜடாவத், ஒரு வார கால அவகாசம் கூடுதலாக வழங்கியதோடு, அவர்களின் கோரிக்கையையும் பரிலீப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து ஜீவா நகரில் உள்ள வீடுகளை பொதுமக்கள் காலி செய்து வருகின்றனர். ஒரு வார காலத்திற்கு பிறகு இந்த வீடுகளில் மீதமுள்ள வீடுகளை பொக்லைன் கொண்டு இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...