இனி அடுத்த இலக்கு மருதமலை அடிவாரம்; தடாகத்தை தொடர்ந்து மருதமலையை குறிவைக்கும் செங்கல் சூளைகள்

கோவை : தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள வலுத்து வரும் நிலையில் மருதமலை அடிவாரம் பகுதியை நோக்கி செங்கல் சூளைகள் பார்வையை திருப்பியுள்ளதாக எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கோவை : தடாகம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள வலுத்து வரும் நிலையில் மருதமலை அடிவாரம் பகுதியை நோக்கி செங்கல் சூளைகள் பார்வையை திருப்பியுள்ளதாக எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

செங்கல் சூளைகளுக்காக மணல் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அரசு கடந்த சில நாட்களாக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக செங்கல் சூளை அதிபர்கள் மணல் அள்ளுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.



இது ஒரு புறம் இருக்க சத்தமில்லாமல் சட்டவிரோதமாக மருதமலை அடிவார பகுதிகளில் செங்கற்களுக்கான செம்மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

ஓசை தன்னார்வ அமைப்பை சேர்ந்த சையத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.



இன்று மாலை (04.10.2019) மருதமலை அருகே உள்ள சின்னமலை அடிவாரத்தின் தம்புராயன் துறை பகுதியில் புதரில் மறைந்து நின்றிருந்த செம்மண் லாரி ஒன்றை மடக்கிய சையத், அதன் ஓட்டுனரிடம் அனுமதி கடிதங்களை கேட்டுள்ளார்.

முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்த ஓட்டுனரிடம் இருந்த அனுமதி கடிதம் சின்னத்தடாகம் பகுதியில் மணல் அள்ளுவதற்கான உரிமங்கள் என்பதும் அவை கடந்த ஏப்ரல் மாதத்துடன் காலாவதியானதும் தெரியவந்துள்ளது.



இது தொடர்பாக சையத், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த போதும், யாரும் அங்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் சிலரின் உதவியுடன் இது தொடர்பாக சையத் விவரங்களை கேட்டறிந்துள்ளார்.



செம்மண் அள்ளி வந்த லாரி அனன்யா செல்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் ஏ.பி.டபிள்யூ செங்கல் சூளைக்கு மணல் கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இது மேலும் மனித விலங்கு மோதல்களுக்கு வழி வகுக்கும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கமறிய சிம்பிளிசிட்டி சார்பில் வடக்கு தாசில்தார் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம். பட்டா நிலத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர் முறைகேடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு முடித்துக்கொண்டார்.

இதனிடையே சையதை தொடர்பு கொண்ட சில நபர்கள், இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனவும் விலகி இருக்குமாறும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. 

இயற்கையை காக்க முயற்சித்து வருவதாக கூறும் இவர்கள் எப்படி இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடிகிறது, என தனது வருத்தத்தை சையத் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...