கோவை : மருத்துவ தேர்வாணயம் மூலம் பணி ஆணை பெற்ற செவிலயர்களுக்கு சம வேளை மற்றும் ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசால் நேரடியாக பணி ஆணை பெற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற மருத்துவ நிலையங்களில் சுமார் 9 ஆயிரம் செவிலியர்கள் ஐந்து ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.

நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஒரே வேலையை செய்யும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு ரூபாய் 14000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பணியை செய்யும் செவிலியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை கலைந்து ஒப்பந்தம் மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கும் ஒரே மாதிரியான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற 8 ஆணையின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தின் மூலமாக வந்த பெருநில வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஒப்பந்த செவிலியர்கள் சமவேலை செய்கிறார்களா என்று சுகாதார செயலாளர் தலைமையிலான குழு ஆராய்ந்து சமவேலை செய்தால், சம உதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம உதியம் தர தமிழக அரசு மறுத்துவிட்டது. கடந்த 29.09.2019 அன்று எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் வைத்து நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி 04.10.2019 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ தேர்வாணயம் மூலம் பணி ஆணை பெற்ற செவிலயர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.