நீலகிரி : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பயணிப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தொடர்ந்து 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை வயநாடு மாவட்ட மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், கட்சி, மதம், இன பேதமின்றி, போராடி வரும் வயநாடு மக்களுக்கு ஆதரவாகத்தான் என்றும் நிற்பேன் என்றார்.
வயநாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்தின் முக்கிய சாலையில் நிரந்தர போக்குவரத்துக்கு எதிராக சட்டரீதியாக சந்திக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்த அவர், சாலை தொடர்பான பிரச்சனைகளுக்கு மத்திய அமைச்சருடன் பேசி இருப்பதாகவும் மக்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் என்று கூறினார்.
மேலும், சட்ட ரீதியாக இதனைச் சந்திக்க வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.