நீலகிரி : நாடு முழுவதும் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலையை தனியார் மையமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 41 தளவாட தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி, மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பிரதமரை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம் பி ஆ, ராசா குன்னூரில் தெரிவித்தார்.

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான 41 பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் வெடிமருந்துகளை தயாரிக்கும் 11 தொழிற்சாலைகளும் அடங்கும்.
தமிழகத்தில் அருவங்காடு, திருச்சி, ஆவடி ஆகிய இடங்களில் 6 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் தனியார் மையமாக்கும் திட்டத்தை கைவிட கோாி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கூட்டுக்குழு கூட்டம் சார்பாக நீலகிரி மாவட்ட எம்பி ஆ, ராசா அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம் பி ஆ.ராசா, தொழிலாளர்களிடமும் தொழிற்சங்கத்திடமும் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளாா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தனியார் மயமாதலை தடுப்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 41 மக்களவை. தொகுதிகளில் உள்ள மக்களவை உறுப்பினர்களை ஒன்றிணைத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்லது பிரதமரை குளிர்காலக் கூட்டத்தொடரின் பாேது சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருப்பதால் உதகையில் மூடப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற வேண்டும்.என தெரிவித்தார்.