நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர்‌ பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர்

கோவை : கோவை மாநகராட்சியில்‌ நகாப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2019க்கான வாக்காளர்‌ பட்டியலை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ வெளியிட்டார்.

கோவை : கோவை மாநகராட்சியில்‌ நகாப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2019க்கான வாக்காளர்‌ பட்டியலை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ வெளியிட்டார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

கோவை மாநகராட்சியில்‌ 6 சட்டமன்றத்‌ தொகுதிகளும்‌, 100 வார்டுகளும்‌, 1216 வாக்குச்‌ சாவடிகளும்‌ உள்ளன. மாநகராட்சியில்‌ வாக்காளர்களின்‌ மொத்த எண்ணிக்கை பதினான்கு இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து நூற்று ஏழு, இதில்‌ ஆண்‌ வாக்காளர்கள்‌ ஏழு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்து நூற்று எழுபத்து ஆறு பேரும்‌, பெண்‌ வாக்காளர்கள்‌ ஏழு இலட்சத்து பதினைந்தாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு பேரும்‌, பிறர்‌ இருநூற்று ஏழு பேரும்‌ உள்ளனர்‌.

மேலும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ உள்ள வாக்குச்சாவடி மையங்களில்‌ வடக்கு மண்டலத்தில்‌ 195 வாக்குச்சாவடி மையங்களும்‌, கிழக்கு மண்டலத்தில்‌ 213 வாக்குச்சாவடி மையங்களும்‌, தெற்கு. மண்டலத்தில்‌ 236 வாக்குச்சாவடி மையங்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 246 வாக்குச்சாவடி மையங்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 326 வாக்குச்சாவடி மையங்களும்‌ ஆக மொத்தம்‌ கோவை மாநகராட்சியின்‌ மொத்த வாக்குச்சாவடி மையங்களின்‌ எண்ணிக்கை 1216 என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...