பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த ஒரு மாத இலவச விழிப்புணர்வு முகாம்

கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த ஒரு மாத இலவச விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.


கோவை : பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த ஒரு மாத இலவச விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டங்களில் கண்டறிந்து, நோயை முழுமையாக குணப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த முகாமில், பதிவு செய்தவர்களுக்கு முற்றிலும் இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகிறது.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கிருபா ஷங்கர், "மார்பக புற்றுநோய் நம் நாட்டில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது உயிர்வாழ்வதற்கு முக்கியமாகும். மார்பக சுய பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கிரீனிங் மேமோகிராபி, ஆரம்பகால நிலையில் மார்பக புற்றுநோயைக் கண்டறிய உதவுவதில் இன்றியமையாதது என்றும் முழுமையான குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றார்.

இந்தியாவில் 60% மார்பக புற்றுநோய் 3 மற்றும் 4 ஆம் நிலைகளில் அடையாளம் காணப்படுவதால், இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்த அவர், இந்த முகாம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நோயைப் பற்றி அறிந்துகொள்ள பயனுள்ளதாக அமையும் என்று கூறினார்.

இதுகுறித்து திட்ட இயக்குநர் டாக்டர் டி பாலாஜி கூறுகையில், "மார்பக புற்றுநோய்க்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை எனவும் உடல் பருமன், வயது, உணவு, புகையிலை பயன்பாடு போன்றவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றார். நோய் குறித்து ஆரம்பகால கண்டறிதல் மூலம் வெளிநாடுகளில் 89% மார்பக புற்றுநோய் நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிய பெண்கள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.



இந்த நிகழ்வில், டாக்டர் சிவகுமார் குப்புசாமி மற்றும் டாக்டர் மோகனராஜ் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர், டாக்டர் ரமேஷ் சந்தர், குழந்தை புற்றுநோயியல் நிபுணர் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் மதுலிகா விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...