கோவை : கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உரிமையியல், குற்றவியல், கிரிமினல், சிபிஐ, நுகர்வோர் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும், கோவை நீதிமன்றத்தில் தினமும் பல்வேறு குற்ற வழக்குகள் சம்பந்தமாக பலதரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில், நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இதே சூழ்நிலை நிலவி வருவதால், நீதிமன்றங்களை அதிகப்படுத்தி வழக்குகளை விரைந்து விசாரிக்க நீதி துறை பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதியதாக நீதிமன்றங்கள், மற்றும் சார்பு நீதி மன்றங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக IV வது கூடுதல் சார்பு நீதிமன்றம் இன்று திறக்கப்பட்டது.
நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.