கோவை : காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீரில் காந்தியடிகள் ஓவியத்தை வரைந்த ஓவிய ஆசிரியர், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நீரின் மேல் வரையப்பட்ட இந்த ஓவியத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள ஆர்.கே.ரங்கங்மாள் பள்ளி ஓவிய ஆசிரியர் மூர்த்தி, மாணவர்களிடையே ஓவிய வரைதலை ஊக்குவிக்கவும் வகையில் தண்ணீரில் காந்தியடிகளின் உருவப்படத்தை கோலப்பொடி கொண்டு வரைந்து இருந்தார்.
இதுகுறித்து ஓவிய ஆசிரியர் மூர்த்தி பேசுகையில், தண்ணீரில் ஓவியங்கள் வரையும் போது கவனமாக வரைய வேண்டும் என்றும் அழுத்தம் அதிகமானால் கோலப்பொடி தண்ணீரில் மூழ்கி விடும் என தெரிவித்தார்.

இந்த ஓவியத்தை வரைய ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டதாக கூறிய அவர், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த மாதம் பூக்களால் வரைந்து இருந்ததாக தெரிவித்தார்.

மேலும், அடுத்ததாக காடா துணி கொண்டு காந்தியடிகள் உருவப் படத்தை வரைந்து, அதில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.