ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் காலநிலை மாற்ற அவசரநிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம், காலநிலை மாற்றங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்தியாவில் காலநிலை அவசர பிரகடனம் செய்யவேண்டும், இது தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்வர் சந்தித்து முறையிட இருக்கின்றோம் என்றார்.
மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும் என தெரிவித்த அவர், கோவை தடாகம் பகுதியில் செம்மண் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தனார்.
பேனர்கள் வைப்பது குறித்து பதிலளித்த அவர், பேனர்கள் வைப்பது தேவையற்றது மற்ற மேலை நாடுகளில் இது போன்ற கலாச்சாரம் கிடையாது. பேனர் வைப்பது, சுவர் விளம்பர கலாச்சாரம் போன்றவை தேவையற்றது என்றவர் சீன ஜனாதிபதிக்கு பேனர் வைக்க விதிவிலக்கு கேட்டு இருக்கின்றார்கள், அரசியல் கட்சிகள், தமிழக அரசு என அனைவரும் இதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
நீட் மருத்துவ படிப்பில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் இடம்பெற்றுள்ளனர் இது குறித்து சிபி்ஐ விசாரணை நடத்த வேண்டும் மற்றும் கடந்த ஆண்டு நீட் சேர்க்கை குறித்தும் விசாரித்து தவறு செய்த மாணவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தவர்.

முன்னதாக கோவை விமான நிலையம் வந்த அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் பாமக இளைஞரணியினர் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.