நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களில் உலா வரும் ஆண் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே சுற்றி உள்ள தேயிலைத் தோட்டங்களில் உலா வரும் ஆண் காட்டு யானைகளால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை, கொலக்கம்பை, தூதூ் மட்டம், குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், உதகை அருகே உள்ள தும்மனட்டி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஆண் காட்டுயானைகள் அவ்வப்பாேது உலா வந்திருக்கின்றன.
இதன் காரணமாக, இப்பகுதி தொழிலாளர்கள் தேயிலைகளை பறிக்க செல்லாமல் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.