கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்த வழக்கில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை : இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்த வழக்கில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (47). இவர் இலங்கை அகதிகளுக்கு வெளிநாடு செல்ல போலி ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர் 6 பேருக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்ததும், அதில் இருவர் வெளிநாட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த க்யூ பிரிவு போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குற்றவியல் நடுவர் நீதிபதி ஞானசம்பந்தம், அவரை வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.