கோவை : இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் பாரத தரிசன யாத்திரையை மதுரை மற்றும் திருச்சியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக துணை மேலாளர் ஜான் ஜோசப் தெரிவித்தார்.

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் தென்மண்டல துணை மேலாளர் ஜான் ஜோசப் மற்றும் மேலாளர் சுப்பிரமணி ஆகியோர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், 2005 முதல் பாரத தரிசன சுற்றுலா ரயில் மூலம் 360 பயண திட்டங்கள் வகுக்கபட்டு சிறப்பாக செயல்படுத்தி உள்ளது எனவும் வரும் அக்., 12ம் தேதியன்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வழியாக துவாரகா வரை செல்ல உள்ளதாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு தனி ரயிலில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உணவு கூடத்துடன் கூடிய 12 பெட்டிகளில் 840 பேர் வரை பயணம் செய்யலாம் எனவும் ஒரு நபருக்கான கட்டணம் 10 நாட்களுக்கு 9450 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
மேலும், தரிசன இடங்களுக்குச் செல்ல வாகன வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் வரும் அக்., 22ம் தேதி மீண்டும் மதுரை வந்தடையும் எனவும் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை, நெல்லூர், விஜயவாடா வழியாக செல்லும் இந்த சிறப்பு ரயில், மீண்டும் அதே வழியாக வந்தடையும் எனவும் பயணிகள் இந்த குறிப்பிட்ட இடங்களில் ஏறி இறங்கி கொள்ளலாம் என தெரிவித்தார்.
மற்றொரு ரயிலான தீபாவளி கங்கா சனம் வரும் அக்., 23ம் தேதியன்று மதுரையில் இருந்து புறப்பட்டு வாரணாசி வரை செல்கிறது என்றும் ஒன்பது நாட்களுக்கான இதன் பயண கட்டணம் 8505 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் குளிர்சாதன வசதி கொண்ட முக்திநாத் தர்ஷன் ரயில் வரும் அக்., 19ம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு அயோத்தி, பொக்காரா, காட்மாண்டுவிற்கு செல்கிறது என்றும் இதன் பயண கட்டணம் 53,330 ரூபாய் எனவும் நேபால், லக்நவ், காட்மாண்டுவிற்கு பயண கட்டணமாக ரூ. 50,600 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
வரும் நவம்., 13ம் தேதியன்று மேலும் ஒரு சிறப்பு ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா, கவுஹாத்தி, சிலாங், சிரபுஞ்சி செல்ல ரூ.45,829 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த யாத்திரை செல்லும் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகளை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.