கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்கள், கஞ்சாவை விற்பனைக்கும் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரீமியர் நகரில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான தலைமைக் காவலர் மணி மற்றும் போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதை தொடர்ந்து, போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று மாணவர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார் அந்த மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அமல்ராஜின் மகன் மோனெஷ் (19), ராம்நாடு மாவட்டத்தை சேர்ந்த ரவியின் மகன் மணிகண்ட பிரபு(20) மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமாரின் மகன் அஜய் குமார்(21) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் கோவையில் உள்ள கற்பகம் கல்லூரி மற்றும் கிரைஸ் தி கிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து செட்டிபாளையம் போலீசார், இவர்கள் 3 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.