தரமில்லாத எண்ணெய் விற்பனை ; நடிகை அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் புகார்

கோவை : தரமில்லாத பொருளை விளம்பரப்படுத்த நடித்த நடிகை அஞ்சலி மீதும், கலப்படம் நிறைந்த எண்ணெயை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.



கோவை : தரமில்லாத பொருளை விளம்பரப்படுத்த நடித்த நடிகை அஞ்சலி மீதும், கலப்படம் நிறைந்த எண்ணெயை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

பொதுமக்களுக்கு கலப்படமில்லாமல் தரமான உணவு பொருட்களை தரவேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், தற்போது பொதுமக்கள் பயன்படுத்த தகுதியற்ற எண்ணெய் பொருட்களை ஸ்ரீ அன்னபூர்ணா அக்ரோ புட்ஸ் விற்பனை செய்து வருவதாக சுடர் பார்வை மக்கள் இயக்கத்தினர் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், இந்த புகாரில் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அரசு விதிமுறைகளை மீறி மூலப்பொருட்களின் அளவுகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணெய் நிறுவனத்தினை தடை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், மக்கள் அந்த எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதவாறு பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தரமில்லாத எண்ணெய்யை விளம்பரம் செய்யும் நோக்கில் நடித்த நடிகை அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தி உள்ளனர்.



இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் பேசுகையில், இந்த புகார் தொடர்பாக இந்த குறிப்பிட்ட எண்ணெய்யை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நடிகை மீதான புகாருக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...