நீலகிரியில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய அவலாஞ்சி அணை ; விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணை திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணை திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



நீலகிரி மாவட்ட அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது



அவலாஞ்சி அணை முழு கொள்ளளவான 171 அடியை இரண்டாவது முறையாக நேற்று இரவு எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 450 கன அடி நீர் திறந்து, இரண்டு மதகுகளில் படி படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குந்தா, பில்லூர் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும், சம வெளிப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளும் பயனடைவர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில், அணைக்கு வரும் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...