கோவை : கோவை தடாகத்தில் கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் நீதி மைய கட்சியினர் மீது செங்கல்சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரையும் மக்கள் நீதி மையத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி 100 அடி வரை செம்மண்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதேபோல, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வெளிக்கொண்டு வந்த கணேஷ், மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரமேஷ், சமூக ஆர்வலர் ஜோஸ்வா உள்ளிட்டோருக்கு பலமுறை செங்கல் சூளை ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று 24 வீரபாண்டி பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஜோஸ்வா செங்கல் சூளைகளுக்கு எதிராக மனு அளிக்க சென்றார். அப்போது 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள் ஜோஸ்வாவை அடித்து இழுத்து சென்று தாக்குதல் நடத்தினர்.
இதேபோல சின்னத்தடாகம் பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பாபு, பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேர் மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
பின்னர், செங்கல் சூளை ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், தாக்குதலுக்குள்ளான 3 பேரையும் கோவை அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல, அக்கட்சியின் தலைவர் கமலஹாசன், தொலைபேசி வாயிலாக தாக்குதலுக்குள்ளான நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.