கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து நமது மேட்டுப்பாளையம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் S.பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்பாட்டத்தில் நகராட்சி பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கப்படாததிற்கும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பிரதான சாலைகள் முதல் வார்டு சாலைகள் வரை குண்டும் குழியுமாக பாராமரிப்பின்றி இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பொது கழிப்பிடங்கள் சரிவர பராமரிக்காமலும் தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்கள்.
தலைமை நீரோட்ட நிலையத்தில் மின் மோட்டார்கள் பழுது அடைந்துள்ளதால் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை, கழிவுநீர் சாக்கடைகள் சுத்தம் செய்வதில்லை மற்றும் மேட்டுப்பாளையத்தில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் ஆடு மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பட்டன.
மேலும், நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளுக்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.