கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மக்கள் நீதி மைய கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர் மீது தடாகம் செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல்

கோவை : கோவை சின்ன தடாகத்தில் இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மக்கள் நீதி மைய கட்சியினர் மற்றும்.சமூக ஆர்வலர் மீது செங்கல்சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை சின்ன தடாகத்தில் இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள மக்கள் நீதி மைய கட்சியினர் மற்றும்.சமூக ஆர்வலர் மீது செங்கல்சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி 100 அடி வரை பொக்லைன் இயந்திரங்கள் மூலம், செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் புகார் கொடுத்துள்ள நிலையில், இன்று 24 வீரபாண்டி பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஜோஸ்வா செங்கல் சூளைகளுக்கு எதிராக மனு அளிக்க சென்றார். அப்போது 30 க்கும் மேற்பட்ட செங்கல் சூளை ஆதரவாளர்கள் ஜோஸ்வாவை அடித்து இழுத்து சென்று தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஜோஸ்வா அதிமுக பகுதி செயலாளர் ஜெயபால் தூண்டுதலால் தான் தாக்குதல் நடந்ததாகவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



இதேபோல, சின்னத்தடாகம் பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பாபு, பிரபு, சுரேஷ் ஆகிய 3 பேர் மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.



அதேபோல, காவல்துறையினர் வந்து தடுத்தும் அவர்கள் முன்னிலையிலேயே மக்கள் நீதி மையம் கட்சியினரை தாக்க முற்பட்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இப்படியிருக்க, செங்கல் சூளை ஆதரவாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நீதி மையத்தை சேர்ந்த மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலையில் இருந்தே கிராமசபை கூட்டத்தில் செங்கல் சூளைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அதேபோல, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வெளிக்கொண்டு வந்த கணேஷ் என்ற மருத்துவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரமேஷ், சமூக ஆர்வலர் ஜோஸ்வா உள்ளிட்டோர்க்கு பலமுறை செங்கல் சூளை ஆதரவாளர்களால் மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...