மேட்டுப்பாளையம் கிராம சபை கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றம்

கோவை : மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மழை நீர் சேகரிப்பு நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை : மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மழை நீர் சேகரிப்பு நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் ஊரக பகுதிகளான சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.



சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் கிராமம் சார்ந்த அடிப்படை பிரச்சனைகளைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவை மாவட்டத்தில் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்துதல், ஜல்சக்தி அபியான் திட்டம் மூலம் மழை நீரினை சேமிப்பதுடன் குளங்களை தூருவாரி அதனை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் போன்றவற்றைத் தவிர்க்கக் கால்நடை முகாம் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது, சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் திறந்து வெளி மலம் கழிப்பை தவிர்க்கவும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் கலைய சத்தான உணவுகளை எடுத்து கொள்ளவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராம சபையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...