திருப்பூர் : திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் இணைந்து 10 மணிநேரம் கைவினைப் பொருட்களை தயாரித்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 19 பேருக்கு, கைவினைப் பொருட்கள் தயார் செய்யும் பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியையான முருகேஸ்வரி அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாணவிகள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொடர் சாதனைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கடந்த 29ஆம் தேதி திருமுருகன் பூண்டியில் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இதனையடுத்து, கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் சாதனை முயற்சியாக அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 10 மணி நேரம் கைவினை பொருட்கள் தயாரிக்கும் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதில் மாணவர்கள் தங்களது வீடுகளில் வளர்த்த காய்கறிகள், கீரை, பயிறு வகைகள் மற்றும் பேப்பர்களை கொண்டு பலவிதமான கண்கவரும் கைவினைப் பொருட்களை தயாரித்தனர். இந்த முயற்சி நிச்சயம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்படும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.