ஒருமுறை பயன்படுத்தப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்‌ : மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை : ஒருமுறை பயன்படுத்தப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்‌ கிராம சபைக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள்‌ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கோவை : ஒருமுறை பயன்படுத்தப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்‌ கிராம சபைக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள்‌ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

கோவை மாவட்டம்‌ முழுவதும்‌ அனைத்து கிராம ஊராட்சிகளில்‌ இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்‌ மயிலேறிப்பாளையம்‌ ஊராட்சியில்‌ அரசு உயர்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி அவர்கள்‌ பார்வையாளராக கலந்து கொண்டார்‌. 



இந்த நிகழ்வில், ஒரு முறை மட்டும்‌ பயன்படுத்தப்படும்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள் பயன்படுத்தவும்‌, உற்பத்தி செய்யவும்‌ தடை செய்தல்‌, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீரினை சேமிக்கும்‌ பொருட்டு, ஊரகப் பகுதிகளில்‌ உள்ள அனைத்து குடியிருப்புகள்‌, வணிகம்‌ / தொழில்‌ நிறுவன கட்டிடங்களில்‌ மழைநீர்‌ சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல்‌, கொசுக்கள்‌ மூலம் பரவும்‌ நோய்களை தடுக்க போதுமான சுகாதார நடவடிக்கைகள்‌, தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும்‌ நீர்‌ மேலாண்மை இயக்கம்‌ குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்‌, ஊராட்சிப்‌ பகுதிகளில் நடைபெற்று வரும்‌ பல்வேறு திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம், மக்கள் திட்டமிடுதல்‌ இயக்கம்‌, கிராம ஊராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ பொதுநிதி செலவினம்‌, ஊட்டச்சத்து இயக்கம்‌, முழு சுகாதார தமிழகம்‌, முன்னோடி தமிழகம்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டம்‌, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்‌( ஊரகம்‌), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ குறித்து விவாதிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ்‌, வேளாண்மை இணை இயக்குநர்‌ சித்ராதேவி, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(வேளாண்மை) சிவசுப்பிரமணியன்‌, வேளாண்மை துணை இயக்குநர்‌ டாம்‌.சைலஸ்‌, உதவி இயக்குநர்‌ (ஊராட்சிகள்‌) சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ சுந்தரி, கணேசன்‌, மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்துகொண்டனர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...