செம்மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சமூக ஆர்வலர் ஜோஸ்வா மீது சூளை ஆதரவாளர்கள் தாக்குதல்

கோவை : கோவை தடாகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஜோஷ்வா மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவை தடாகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற ஜோஷ்வா மீது செங்கல் சூளை ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் பகுதியில் பல வருடங்களாகச் செங்கல் சூளைக்குச் செம்மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது என்றும் வனவிலங்குகளுக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சமூக ஆர்வலர் ஜோஸ்வா, ஊடகங்கள் வாயிலாகவும் அதிகாரிகளிடமும் தொடர்ச்சியாகப் புகார் அளித்து வந்தார்.

இந்த நிலையில், தடாகம் அருகே உள்ள வீரபாண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஜோஸ்வா பங்கேற்க செங்கல் சூலை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் ஜோஸ்வாவை அங்கு வந்திருந்த சிலர் தாக்கினர்.

இதையடுத்து தடாகம் காவல் துறையினர், சமூக ஆர்வலர் ஜோஸ்வாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...