கீழடி நாகரீகம் தொடர்பாக மேலே இருப்பவர்கள் சொல்வதை அமைச்சர் மா.ஃபா சொல்கிறார் : நல்லக்கண்ணு விமர்சனம்

கோவை : கீழடி நாகரீகம் தொடர்பாக மேலே இருப்பவர்கள் சொல்வதை, அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் சொல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு விமர்சித்துள்ளார்.

கோவை : கீழடி நாகரீகம் தொடர்பாக மேலே இருப்பவர்கள் சொல்வதை, அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் சொல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு விமர்சித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்து வருவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே நீதிபதி பதவி உள்ளிட்ட துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கீழடி நாகரீகம் பாரத நாகரீகம் என்ற அமைச்சர் பாண்டியராஜனின் கருத்தை விமர்சித்த அவர், அமைச்சருக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதை அவரும் சொல்வதாகவும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் என்பது தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.

ஹட்ரோகார்பன் எடுக்க அனுமதியளிப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் பாழாகும் என்பதாலேயே அதனைக் கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

திமுகவினரிடம் 15 கோடி ரூபாயை கம்யூனிஸ்ட்டுகள் வாங்கியதாக தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நன்கொடையாக வாங்கியது வழக்கமான செயல்பாடு தான் எனவும் முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதால் அதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.

காந்தி ஜெயந்தியில் மதச்சார்பின்மை, அமைதி உள்ளிட்டவற்றைப் பரப்புவதற்கு மாறாக மத்திய அரசு சுத்தம் தொடர்பாக மட்டும் பேசுவதாக கூறிய அவர், காந்தியின் கருத்துக்களை முழுமையாக பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...