கோவை : பிரெய்லி பதிப்பகம் அமைத்து தரமான இலவச புத்தகங்கள் வழங்கிட வேண்டும் என பார்வையற்றோர் தேசிய ஆணைய அகில இந்திய பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார் ருங்ட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பார்வையற்றோர் தேசிய ஆணைய அகில இந்திய பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார் ருங்ட்டா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட 4% வேலை வாய்ப்பினை 6 மாதத்திற்குள் முழுமையாக கிடைக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து மூவாயிரமாக அதிகரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு பிரெய்லி அச்சகத்தை ஏற்படுத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயில பிரெய்லி பதிப்பகம் அமைத்து தரமான இலவச புத்தகங்கள் வழங்கிட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மாற்றுத் திறனாளிகளின் உரிமைச் சட்டம் 2016 விதிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்றும் விதிமுறைகளைத் திருத்தி அமைத்து சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றவர், பிரெய்லி முறையை வளர்ப்பதற்குத் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், அரிசிபாளையத்தில் பார்வையற்ற சிறப்பு முதியோர்களுக்கான இல்லம் ஒன்று கட்டப்பட உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசிடம் நிதியுதவி கோர உள்ளதாகவும் பொதுமக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பார்வையற்றோர் தேசிய இணைய தென்னிந்திய திட்ட இயக்குனர் மனோகரன், தமிழ்நாடு மேற்கு கிளை ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் மற்றும் ஆந்திரா கிளை தேசிய செயற்குழு உறுப்பினர் நாகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.